,

பாசிங்காபுரம் ராமலிங்கபுரம் கிராமத்தில் மகாமுனீஸ்வரர் ஆலய 33வது ஆண்டு வருடாபிஷேக விழா

alanganallur
Spread the love

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள  பாசிங்கபுரம் ராமலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள
மகா முனீஸ்வரர் ஆலய 33 வது ஆண்டு வருடாபிஷேக விழா  நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை  மங்கல இசை முழங்க   மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து திருக்கோவிலில் வைத்து மகா முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்று பிற்பகல் 12 மணிக்கு அன்னதானமும் மாலை108திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும்  வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாசிங்கபுரம் ராமலிங்கபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.