பாங்காக்கில் நடைபெற்ற 6-வது ஆசிய இளைஞர் உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அம்ருதா பி.எச்.டி. மாணவி சீனா குண்ட்ரக்பாம்

Spread the love

தாய்லாந்தின் பாங்காக்கில் கடந்த ஆகஸ்ட் 3 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற 6-வது “இன்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ் ஆஃப் தி ஆசிய யூத் சம்மிட்” மாநாட்டில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமையை அம்ருதா தர்சனம் – இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ஸ்பிரிசுவல் அண்ட் கல்ச்சரல் ஸ்டடீஸின் பி.எச்.டி. மாணவி ஆன சீனா குண்ட்ரக்பாம் பெற்றார்.

இந்த மாநாடு “பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான தொழில்கள்” என்ற முக்கியமான கருப்பொருளின் கீழ் நடைபெற்று, உலகெங்கிலும் இருந்து வந்த வல்லுநர்களும், திறமையான இளைஞர் தலைவர்களும் கலந்து கொண்டு பல்வேறு நிலைத்தன்மை தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டனர். சீனா குண்ட்ரக்பாம், குறிப்பாக கார்பன் உமிழ்வு குறைப்பு மற்றும் நிலையான தொழில் நடைமுறைகள் தொடர்பாக உரையாற்றி, தனது ஆழ்ந்த நுண்ணறிவும் வலுவான தர்க்கங்களும் மூலம் சர்வதேச பங்கேற்பாளர்களின் பாராட்டுகளை பெற்றார்.

இளைஞர்கள் நிலைத்த வளர்ச்சிக்கு உறுதியான தொண்டர்களாக இருக்க வேண்டிய அவசியத்தை அவரது பங்கேற்பு வலியுறுத்தியது. குளோபல் யூத் அம்பாசிடர் (சர்வதேச இளைஞர் தூதர்) என்ற உயரிய பதவியில் சீனா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, இந்தியாவின் நிலைத்த வளர்ச்சிப் பார்வையை சர்வதேச அரங்கில் பிரதிபலிக்கச் செய்தார்.