இந்திய சினிமாவின் பிரம்மாண்ட வெற்றிக்கதை ‘பாகுபலி’ — இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் பெயரை உலகளவில் அறிமுகப்படுத்திய திரைப்படமாக திகழ்கிறது. பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான இந்தப் படம். இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்.
முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் அதனைவிட மூன்று மடங்கு வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது.
பாகுபலி திரைப்படம் வெளியாகி, இப்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, ரசிகர்களுக்கு மீண்டும் காட்சி விருந்து அளிக்க முடிவு செய்துள்ளது படக் குழுவினர். அந்தவகையில், வரும் அக்டோபர் மாதம் பாகுபலி முதல் பாகம் திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியாகியதிலிருந்து, ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரே வரியில் சொன்னால், பாகுபலியின் மாயாஜாலம் திரையரங்குகளில் மீண்டும் உருவெடுக்க உள்ளது!
பாகுபலி மீண்டும் பெரிய திரையில் வந்தால் நீங்கள் திரையரங்குக்கு சென்று பார்ப்பீர்களா?
Leave a Reply