பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் இந்தியா தாக்குதல் – தமிழ்நாடு துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

mkstalin
Spread the love

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில், இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அமைந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது.

இந்த நடவடிக்கையால் பயங்கரவாத அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன. நாட்டின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல், இந்தியாவின் விஸ்வரூப பதிலடி என போற்றப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியுடன் துணைநிற்கும் என தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “தேசிய பாதுகாப்பு சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு இந்திய ராணுவத்துடன் உறுதியாக கைகோர்க்கும்” என அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கான விளைவுகள், அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.