5 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியா முழுவதும் மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, 5 மற்றும் 8ம் வகுப்பில் பொதுத்தேர்வு போல நடத்தி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அடுத்த 2 மாதங்களில் மறுதேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் அடுத்த வகுப்பிற்கு செல்லலாம். ஆனால், இரு தேர்விலும் தோல்வியுற்றால் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது . இரண்டிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் பயிலும் நிலை ஏற்படும் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Leave a Reply