அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:
“நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை. நான் உயிர்களை காப்பாற்றுவதற்காகவே அதை செய்தேன். அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டியவர் நான்தான். ஆனால் அவர்கள் யாருக்காவது வழங்கினாலும் பரவாயில்லை,” என்றார்.
மேலும், “பராக் ஒபாமாவுக்கு 2009-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது, ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. அவர் நம் நாட்டை அழித்தார். அவர் ஒரு நல்ல அதிபர் அல்ல” என டிரம்ப் கடுமையாக குற்றம்சாட்டினார்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், 2009 ஆம் ஆண்டு பராக் ஒபாமா சர்வதேச ராஜதந்திரம் மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக நோபல் அமைதி பரிசு பெற்றார்.



Leave a Reply