தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிறு) மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. கூட்டணியில் கூடுதல் சீட்டுகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என பல்வேறு நிலைகளில் எழுந்த நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த சில மாதங்களாகவே, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய கூட்டணியில் கூடுதல் அதிகாரச் செல்வாக்கை கோர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மேலிட பார்வையாளர் முன்பு முறையிட்டிருந்தனர். அவர் கூட்டணி விவகாரங்களை டெல்லி தலைமையே முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.
நாளைய கூட்டத்தில்:
• வருகிற தேர்தலுக்கு முன் கூட்டணித் தெளிவுகள்
• கூடுதல் சீட்டுக்கு வலியுறுத்தல்
• ஆட்சிப்பங்குக்கு கோரிக்கை
• 77 மாவட்டங்களிலும் புதிய தலைவர்கள் நியமனம்
• ராகுல் காந்தியின் தமிழ்நாடு பிரசாரத்திற்கான திட்டம்
இவற்றில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக தகவல்.
மேலிட பார்வையாளர் கிரீஷ் சோதங்கரும் கூட்டத்தில் பங்கேற்கிறார். விஜய் தலைமையிலான தவெக உடன் கூட்டணி பேச்சு போன்ற விவகாரங்களும் பரவலாக பேசப்படும் எனக் கூறப்படுகிறது. பீகாரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் போல தமிழ்நாட்டிலும் பிரச்சனைகள் உருவாகாத வகையில் முன்கூட்டியே முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடில் காங்கிரஸ் உள்ளது.
நாளைய செயற்குழு கூட்டம் தான் காங்கிரசின் எதிர்கால அரசியல் பாதையை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவுகிறது.



Leave a Reply