அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதில் சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் உதவி கோரிய அவர்கள், “நாங்கள் எங்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை” என்று கூறினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியதும் ‘நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்’ என்ற விவாதத்தை எழுப்புயது.
இப்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா தூதரகம் பதில் வெளிவந்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் தனது சமூக வலைதள பதிவில், “அமெரிக்காவில் இருந்து பனாமா வந்துள்ள இந்தியர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பனாமா அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக நாங்கள் பனாமா அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ கூறுகையில், அமெரிக்காவிலிருந்து வரும் இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு பனாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஹோட்டலில் மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இருப்பினும், சர்வதேச அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் வரை அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை” என்று விளக்கமளித்தார்.
Leave a Reply