ஆ.வெ.மாணிக்கவாசகம்
தமிழக சட்ட மன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதில் கோவை மாவட்டத்திற்கு பல அறிவிப்பு களை வெளியிட்டார்.
“அறிவைப் பெருக்கிடல் வேண்டும்; இங்கு அனை வருக்கும்.”. – என்பதற்கு இணங்க கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவராலும் வரவேற் கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நொய்யல் நதி கோவை, திருப்பூர் மாவட்டங் களின் முதன்மை நநியாக விளங்கி வரும் “ நொய்யல்’’ நதியினை சீர் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின், கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
1000 இடங்களில் இலவசமாக Wifi – Hotspot வசதி ஏற்படுத்தப் படும்.
கோவையில் குறுந்தொழில் முனைவோர் உடனடியாக தொழில் செய்ய 12 ஏக்கர் பரப்பளவில் நான்கு அடுக்குமாடிகள் கொண்ட ஆயத்த தொழில் வளாகம் ரூ.37 கோடி மதிப்பீட்டில் குறிச்சி தொழில் பேட்டை வளாகத்தில் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கட்டப்படும் தொழில்நுட்ப பூங்கா
ரூ.ஆயிரத்து 128 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்
உள்ளிட்ட அறிவிப்புகள் பலராலும் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் பி. எஸ். செல்வகுமார் கூறுகையில், பட்ஜெட் உரையில் கோவைக்கு ரூ.ஆயிரத்து 128 கோடியில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதாக அறிவிப்பு செய்துள்ளார் நிதியமைச்சர், ஆனால், ஏற்கெனவே இங்கிருக்கும் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க எந்த நிதியும் ஒதுக்காத நிதியமைச்சர், எதற்காக புதிய கட்டிடம் கட்ட மட்டும் நிதி ஒதுக்கியுள்ளார் ?
நெரிசல் கீரணத்தம் தொழில்நுட்ப பூங்காவில் இருபத்தி ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் .
அங்கு பணிபுரிய செல்பவர்களால் காலையிலும் மாலையிலும் சக்தி சாலை சரவணம்பட்டியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகின் றனர், அதை சரி செய்யவோ, நிலுவையில் இருக்கும் கரட்டுமேடு-கீரணத்தம் நான்கு வழி சாலையை பற்றியோ ஏன் எந்த அறிவிப்பும் இல்லை ? அவிநாசி சாலையில் இருந்து டைடல் பாரக் செல்லும் இணைப்பு சாலை இன்னும் நிறைவடையவில்லை.
ஹோப் காலேஜ் தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள மேம்பாலம் இன்னும் முடிக்கபடாமல் இருக்கிறது.
4 வழி சாலை
அதே, போல சித்ரா-குரும்பபாளையம் நான்கு வழிசாலை பல ஆண்டு களாக நிலுவையில் உள்ளது, காளப்பட்டி பகுதியில் கடந்த
சில ஆண்டுகளில் மட்டும் இரண்டு பெரிய தனியார் மென்பொருள் பூங்கா தொடங்க பட்டுள்ளது.
மேலும் இரண்டு பூங்கா விற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சலையில் இப்போது கூடுதலாக தினசரி 5,000 வாகனங்கள் இயங்க ஆரம்பித்துள்ளது.இதை சரி செய்ய உடனடியாக நான்கு வழி சாலை அமைக்க வேண்டும், இதற்கான எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
நீலாம்பூர் – மதுக்கரை சாலையில் புதிய தொழில் நுட்ப பூங்கா வர இருக்கும் நிலையில் இந்த சாலையை விரிவு படுத்த எந்த நிதியும் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்
Leave a Reply