கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் வித்யா (வயது 23). ஜூலை 5ஆம் தேதி காலை நேரத்தில் வழக்கம் போல வீட்டின் சமையல் வேலைகளை முடித்தவர், கழிவறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டி பார்த்தபோது சத்தமில்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவாறு இருந்துள்ளார். அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மரணம் உறுதி செய்யப்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்கொலை செய்து உயிரிழந்த வித்யாவுக்கு 3 சகோதரிகள் மற்றும் மனநலம் பாதித்த ஒரு சகோதரர் இருந்துள்ளனர். சகோதரிகள் மூவரும் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் வித்யா தனது தாய் புஷ்பா மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட விபத்தில் புஷ்பாவின் தாயார் படுக்கையாகி விட்டார். இதனால் குடும்ப பொறுப்பு அவரின் தலையில் ஏறியுள்ள
மேலும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு தாய்க்கு உதவியாக அவர் இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. குடும்ப வருமானத்துக்காக தென்னை நார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற வித்யா, அதில் கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் படுத்த படுக்கையான அம்மாவையும், மனநலம் பாதித்த சகோதரரையும் அவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கருங்கல் பகுதியில் வசித்து வரும் அருண் என்ற இளைஞரை வித்யா காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் புஷ்பாவுக்கு தெரிந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.
பெற்றோரை இழந்த காதலன் அருணின் உறவினர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த மாதம் 5ஆம் தேதி அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் வந்த வித்யா காதலன் இறந்த அதே தேதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்



Leave a Reply