பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றி வணங்குவோம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உருக்கமான பதிவு

Spread the love

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் உணர்ச்சி மிகுந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று!
தனது 19வது வயதிலேயே அரசியலில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
அரசியலில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதையிலும், ஆன்மீகத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் சித்தர் ராமலிங்க அடிகள் அவர்களின் வழியிலும் நடந்த மாபெரும் தலைவர் அவர்!”

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின்போது உருவாக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்யப் போராடி வெற்றி கண்டவர் தேவர்.
அன்றைய அரசியல் சூழலில் “இளம் சிங்கம்” என்று அறிமுகப்படுத்தப்பட்ட அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர்.
இன்றைய தினத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றி வணங்குவோம்.”

இந்த பதிவின் மூலம் நயினார் நாகேந்திரன், பசும்பொன் தேவரின் அரசியல் பங்களிப்பு மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை நினைவுகூர்ந்துள்ளார்.