நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவரும் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா , பசியாறும் சோற்றில் விஜயகாந்த் ஓவியத்தை மஞ்சள் தூள் கொண்டு வரைந்துள்ளார். இது குறித்து ராஜா குறிப்பிடுகையில் சோற்றில் விஜயகாந்த் படம் வரைந்திட காரணம் என்னவெனில், ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து முகம் மகிழும் வள்ளலாக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த் . இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சள் கலந்து அவருடைய திருவுருவத்தை ஓவியமாக வரைந்தேன். ” என்றார். மேலும், இந்த ஓவியத்தை நான்கு மணிநேரம் எடுத்து வரைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பசியாறும் சோற்றில் விஜயகாந்த் ஓவியம் – கோவை நகைவடிவமைப்பாளரின் அஞ்சலி

Leave a Reply