சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார் அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் புதைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிபதி ஆம்ஸ்டிராங்க் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் புதைக்க அனுமதி அளித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நீதிபதி அவ்வாறு கட்டுவதாக இருந்தால் அது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஆனந்த் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் அருகே ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply