கோவை, ஆக.9 கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 39வது ஆண்டு விளையாட்டு தினவிழா கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 100 மீட்டர் 200 மீட்டர் 500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளி முன்னாள் மாணவர்கள் வழங்கினர். முன்னதாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை இன்ஸ்பெக்டர் கந்தசாமி கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார்.
இதில் ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Leave a Reply