இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆகாஷ் கல்விச் சேவைகள் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி உள்ள நிலையில், கோவையில் ஆகாஷ் கல்விச் சேவைகள் நிறுவனக் கிளைகளில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். குறிப்பாக, கோவையைச் சேர்ந்த மாணவர்கள் மதுநந்தன் தேசிய அளவில் 619-ம் இடத்தையும் கவின் 1996-ம் இடத்தையும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.
இந்நிலையில், சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை பாராட்டும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள ஆகாஷ் கல்விச் சேவைகள் நிறுவனக் கிளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து கௌரவித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆகாஷ் நிறுவன நிர்வாகிகள் மாணவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




Leave a Reply