நில அளவை களப்பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கையுடன் 48 மணி நேர வேலைநிறுத்தம்!

Spread the love

நில அளவை களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை களப்பணியாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நில அளவை களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட முன் வராமல் தொடர்ந்து நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திரும் களப்பணியாளர்களின் ஒட்டுமொத்த பணியையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக் உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் உடனடியாக நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

துணை ஆய்வாளர் ஆய்வாளர்கள் ஆகியோரது ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 48 மணி நேரத்திற்கு வேலை நிறுத்த போராட்டத்தை நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டமாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட நில அளவை களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தங்களது கோரிக்கைகளை முன் வைத்தும் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.