நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் 9-வது ஆண்டு விழா

Spread the love

நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் 9-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிலக்கோட்டை லேன்ஸ்போர்ட்ஸ் அகாடமியில்,
1977 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைக்கும் “1977 நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள்” அமைப்பின் 9வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக, மறைந்த நண்பர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அவர்களின் நினைவுகள் மரியாதையுடன் நினைவு கூரப்பட்டது.
இதனைத்
தொடர்ந்து ,
நடைபெற்ற கூட்டத்தில், அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திரு தி.பாபு தலைமையிலான 9 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அரசு அதிகாரி
இரா. கண்ணன்,
கலந்து கொண்டு, நண்பர்கள் ஒற்றுமை, சமூகப் பொறுப்பு மற்றும் தொடர்ச்சியான தொடர்பின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
மேலும், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து 50-க்கும் மேற்பட்ட நண்பர்கள் விழாவில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக,
நடைபெற்ற நண்பர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில், ஆறுமுகம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த விளையாட்டு போட்டி நண்பர்களிடையே உற்சாகத்தையும் நெருக்கத்தையும் அதிகரித்தது.
அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில்,
நண்பர்கள் குழுவின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த,
சமூக மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள,
வருடாந்திர சந்திப்புகளை
திட்டமிட்டு நடத்த
ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அவை ஒருமனதாக ஏற்றுக்
கொள்ளப்பட்டன.
ஒற்றுமை, நினைவுகள் மற்றும் பொறுப்புணர்வுடன் நடைபெற்ற இந்த 9வது ஆண்டு விழா, “1977 நிலக்கோட்டை நண்பர்கள்” அமைப்பின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.