, ,

நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்…..

vadipatti meeting
Spread the love

வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தே.மு.தி.க.சோழவந்தான் தொகுதி சார்பாக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் செயற்குழு உறுப்பினர் குருநாதன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் மாரியப் பன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ்,பேரூர் துணைச் செயலாளர் தமிழன் (எ)முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில், மதுரை மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன், மாவட்ட மாணவரணி முத்துப் பாண்டி, துணைச் செயலாளர் அழகர், பேரூர் கழக துணைச் செயலாளர் கோபால் ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் மதுரைக்கு, வரும் பொதுச் செயலாளர் பிரேமலதாவிற்கு , வரவேற்பு கொடுப்பது பற்றியும், ஆகஸ்ட் 25-ல் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், சென்னை கோயம்பேட்டில் விஜயகாந்த் கோவிலில் ஜூலை 26 ந்தேதி சோழவந்தான் தொகுதி சார்பாக மலர் அலங்காரம் செய்து அன்றைய தினம் முழுவதும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குவது சம்பந்தமாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, ஜெயச்சந்திரன், உமர்தீன், சோலை சசிகுமார், பிச்சைமணி, ராஜா பெருமாள், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் கழக பொருளாளர் சோமநாதன் நன்றி கூறினார்.