, ,

நாளை முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டாவுக்கு செல்ல தடை…….

doddabetta
Spread the love

தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாஸ்ட் டேக் நுழைவு கட்டண சோதனை சாவடியில், இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஸ்ட் டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்று இடத்திற்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் சோதனை சாவடிக்கு  கேபிள் ஓயர்கள் அமைக்கும் பணிகளும், சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது நுழைவு கட்டணம் மற்றும் சோதனை சாவடி அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.