தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அதிமுக கொறாடாவும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி சில கேள்விகளை எழுப்பினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கொண்டு வரப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
ஆனாலும் , முழுமையான பலன் கிடைக்கவில்லை. இந்த திட்டத்தை இயற்றும் போதே, கூடுதல் நீர் கிராமங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதை இலக்காக வைத்துதான் தீட்டினோம். இந்த திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் சேதமடைந்து கிடக்கின்றன. இத்தகைய பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் 25 கி.மீ தொலைவுக்கு அடிக்கிறது. அங்கு மருந்து அடித்து நாற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், மக்கள் பதற்றத்தில் உள்ளனர். இதன் காரணமாக, போத்தனுர், வெள்ளலூர் மதுக்கரை, குறிச்சி, செட்டிப்பாளையம், ஆத்துப்பாலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குப்பை கிடங்கு பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
எஸ்.பி.வேலுமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக நகர்ப்புற வளர்ச்சி த்துறை அமைச்சர் கே.என்.நேரு, கோவையில் சாலைகளை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை குறித்து கோவை மாநகராட்சி ஆணையருடன் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றார்.
நாற்றமடிக்கும் வெள்ளலூர் குப்பைகிடங்கு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எஸ்.பி.வேலுமணி கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

Leave a Reply