நாற்பதே நிமிடத்தில் இதயம் மற்றும் கல்லீரல் ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் இருந்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
பெருந்துறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயமும், கல்லீரலும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 34 வயதுடைய ஒருவர் சாலை விபத்தில் தலையில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது குடும்பம் முன்வந்தனர்.
தானமாக பெறப்பட்ட உறுப்புகளை கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் கொண்டுவர திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை காவல்துறையினர் உதவினர்.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி போலீசாருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்தார்.
நாற்பதே நிமிடத்தில் பெருந்துறையில் இருந்து கே.எம்.சி.எச் கொண்டு வரப்பட்ட இதயம் மற்றும் கல்லீரல்

Leave a Reply