தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலரால் பரபரப்பு!
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்கள் இதே பகுதியில் விடப்படுவதாகவும் இதனால் மாநகராட்சி 82, 84, 86-வது வார்டு பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இங்கு உள்ள நாய்கள் கருத்தடை மையத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி 84-வது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் அலிமா ராஜா உசேன், தெரு நாய் கடியால் 1000-த்திற்கும் மேறபட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியும் கருத்தடை மையத்தை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் பிரதான மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் அலிமா ராஜா உசேன் கூறுகையில், தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவதாகவும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறிய அவர், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், நாய்கள் கருத்தடை மையத்தை புதுப்பிப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் அதனை உடனடியாக ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் கருத்தடை மையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
Leave a Reply