கோவை நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகினார்.
கோவை நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன், மகளிர் அணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோர் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பயணித்தோம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சர் ஆவார் அவரது வெற்றியிழக்கை அடைவார் மக்களுக்கு நல்லது செய்வார் என்று அவருடன் பயணித்தோம். ஆனால் சமீப காலமாக அவரது கொள்கையில் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூக மக்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அவர்களை வந்தேறிகள் என்று அவர் பேசியது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்பாடுகளால் பல பிரச்சினைகள் வருகிறது. கொங்கு மண்டலத்தில் எங்களது உறவினர்கள் திமுக அதிமுக என பல கட்சிகளில் இருக்கிறார்கள்
ஆனால் நாங்கள் கட்சியில் இருப்பதால் அவர்கள் எங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வர தயங்குகிறார்கள். எங்களைப் போன்று பலரும் அதிருப்தியில் உள்ளார்கள். விரைவில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு விளங்குவார்கள். நாங்கள் எந்த கட்சிக்கு செல்வோம் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. சிறிது நாட்களாகவே எங்களுக்குள் பிரச்சனை இருந்து வந்தது. எங்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் நாங்கள் இனிமேல் அவர்களுடன் பயணிக்க முடியாது என்று முடிவுக்கு வந்தோம். இதனால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டோம்.
நாங்கள் கட்சியிலிருந்து விலகுவதற்கு திமுகவோ எந்த கட்சியோ காரணம் இல்லை. இது நாங்களாக எடுத்த முடிவு. தேர்தலில் சீட்டு கொடுக்கவில்லை என்பதற்காக நாங்கள் விலகவில்லை. தற்போது தான் அங்கு வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இன்னும் அவர்கள் இறுதி முடிவு எடுக்கவில்லை
இவ்வாறு அவர் கூறினார்
Leave a Reply