கோவையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“இயற்கை விவசாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ஆம் தேதி கோவை வருகிறார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? நான் என்னுடைய வாழ்க்கையை நியாயமாக வாழ்கிறேன். யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. நான் செய்யும் தொழிலில் யாருக்கும் பாதிப்பு இல்லை,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, ““எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் — அவர்களுக்கு ஃபீஸ் கட்ட வேண்டியிருக்கிறது. எனக்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய வாகனங்கள் உள்ளன. நான் தொழில் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எந்த தொழிலையும் சட்டப்படி, நேர்மையாக செய்தால் அதில் குற்றமில்லை.
நான் தற்போது கட்சியில் மாநிலத் தலைவராக இல்லை; எனவே எனது வேலையையும், விவசாயத்தையும், தொழிலையும் செய்வதற்கு நேரம் உள்ளது. இன்னும் பல தொழில்களை ஆரம்பிக்கப் போகிறேன். சோம்பேறியாக வீட்டில் இருக்காமல், எல்லோரும் உழைத்து முன்னேறுங்கள்,” என்று தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் விமர்சனங்களையும் பதிவு செய்த அவர்,
“இன்றைக்கு மாநிலத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்கின்றனர். கோவையில் மாணவி மீதான வன்கொடுமை நடந்த பாதை 40 ஆண்டுகளாக பிரச்னைக்குரியது. அங்கு போலீஸ் ரோந்து ஏன் செல்லவில்லை? அதிகாரிகள் தங்கள் பிழைகளை சரிசெய்ய வேண்டும்,” என்றார்.
மேலும், டெல்லியில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். “மும்பையில் நடந்த 26/11 தாக்குதலைப் போலவே டெல்லியிலும் நிகழ்ந்துள்ளது. இது ஆபத்தான ஒன்று. மதத்தை தாண்டி பயங்கரவாதம் உருவாகிறது. இதனை எல்லோரும் ஒன்றாக இணைந்து கண்டிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கு தனி கவனம் செலுத்தி, சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.



Leave a Reply