, , ,

நாட்டாமை  பொன்னம்பலம் பாணியில் அண்ணாமலை… தனக்கு தானே சாட்டையடி!

annamalai
Spread the love
சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் அண்ணாமலை ஆக்ரோஷமாக பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது,

தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட் ஞானசேகரன் தி.மு.க.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ளவர்.  ஏற்கனவே குற்றங்கள் பல செய்தவர். தி.மு.க.,வில் இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி தேவைப்படுகிறது. அந்த கட்சி  பத்திரிகையிலும் அவரது பெயர் உள்ளது வந்துள்ளது.எங்களுடைய குற்றச்சாட்டு அவர் தி.மு.க.,வில் இருப்பது இல்லை. ஒரு குற்றவாளி இதேபோல் கொடூர செயலை செய்தவன், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டு, அமைச்சர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து கொள்கிறால். பின்னர், அதை உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் நான் தி.மு.க.,க்காரன் எனக்காட்ட தேவைப்படுகிறது. ரவுடி ரிஜிஸ்டரில் தனது பெயர் வரக்கூடாது என்பதற்கும், அரசியல் அடையாளத்திற்கும் அந்த புகைப்படம் தேவைப்படுகிறது. அதை வைத்து மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளார். இதுதான் எங்களின் கோபம். அவர் தி.மு.க.,வில் இருப்பதற்காக நாங்கள் கோபப்படவில்லை.

போலீஸ் துறையைத் தவிர வேறு யாரும் எப்ஐஆர்.,ஐ வெளியில் விட முடியாது. அது ஒரு எப்.ஐ. ஆரா. , படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமாக எழுதுவான்.  அந்த பெண் குற்றம் செய்தது போல் எப்.ஐ.ஆர்., எழுதப்பட்டு உள்ளது. அதை படித்தால் ரத்தம் கொதிக்கிறது.  இந்த எப்.ஐ.ஆர்., நீதிமன்றத்தில் நிற்குமா?மொபைல் எண் அப்பா பெயர், ஊர் பெயர் வெளியாகி உள்ளது. இதற்கு வெட்கப்பட வேண்டும். ஒரு  குடும்பத்தை நாசம் செய்துவிட்டீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்களா?

இதனால், திமுக ஆட்சியை கண்டித்து எனக்கு நானே சாட்டை அடி கொடுத்து கொள்ள போகிறேன். டிசம்பர் 27 ஆம் தேதி  காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் என்னை நானே அடித்து கொள்ளப்போகிறேன். தி.மு.க., ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு போட மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பை கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருந்து பிப்ரவரி மாதம் ஆறுபடை வீட்டிற்கு சென்று முருகனிடம் முறையிடுவேன்.சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போனால், முன்னாள் கவர்னரை பிடித்து வைத்துள்ளனர். நாயை பிடிப்பது போல் பிடித்து கொண்டு போயுள்ளனர். ஒவ்வொரு வீட்டுக்கு வீ டு முன்பு போராட்டம் நடக்கும் வீட்டிற்கு வெளியே வந்து பா.ஜ., தொண்டன் போராட்டம் நடத்துவான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக தனக்கு தானே சாட்டையடி எனும் போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் எடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதாவது, “இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் வேறு யார் இருந்தாலும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. குற்றவாளியை சிறையில் வைத்தவரே விசாரணையை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த நபர் கைது செய்யப்படாமல் இருந்தால் இந்த காரணத்தை காட்டி அரசு இதற்காகத்தான் கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டலாம். ஆனால் , உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்க கூடிய சூழலில் அரசின் மீது இப்படி  குற்றம் சுமத்துவது நல்லதல்ல. அண்ணாமலை லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அண்ணாமலை இந்த முடிவை எடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சை வழி போராட்டத்தை காந்தியடிகள் வழியில் இவர் முன்னெடுக்கிறாரா என்று தெரியவில்லை. காந்தி கூட இப்படியான போராட்டத்தை அறிவித்ததில்லை.  இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருக்கிறது ஆனால் அவருடைய போராட்ட அறிவிப்புகள் சிரிக்கும் வகையில் மாறி விடக் கூடாது ” என்று கூறியுள்ளார்.