நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி இரண்டு குப்பியை வீசியதில் மஞ்சள் நிற புகை வெளியேறியது. அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்தின் அருகே போக்குவரத்து பவன் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நீலம் என்ற பெண் மற்றும் அமோல் ஷிண்டே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு மீண்டும் அவை கூடியது .
Leave a Reply