புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதா, இம்முறை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து முன்னணி கட்சிகளின் ஒத்துழைப்பை உறுதி செய்ய, நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
மழைக்காலக் கூட்டத் தொடரில், நாட்டின் தற்போதைய நிலைமைகள், சட்ட ஒழுங்கு, பொருளாதாரத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து தீவிர விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply