நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்ததையடுத்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும், கோவை தொகுதி கமலுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் கமல்ஹாசன் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மக்கள் நீதி மையத்திற்கு மாநிலங்களவையில் ஒரு சீட் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. கூட்டணிக்கான பேச்சு வார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடும் அதுவே. இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம். எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன்” என்று கூறினார்.
Leave a Reply