கோவை காளப்பட்டியில் அமைந்துள்ள மிடாஸ்-டச் பள்ளியில் தலைமை, நல்லாட்சி மற்றும் நல்ல அரசியல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொழில்முனைவோர் அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மும்பையை சேர்ந்த ராம்பாவ் மால்கி தலைமை பண்பு பயிற்சி கல்லூரி சார்பாக அமேயா மஹாஜன், அமேயா தேஷ்பான்டே, சேத்தன் நேர்க்கர் அவர்களும், டெல்லி இன்டாய் நிறுவனம் சார்பாக பரத் கோபு அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி முகாமை வழிநடத்தினர். இந்த நிகழ்ச்சியை கோவை காளப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் செல்வகுமார் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை பற்றியும், தமிழ்நாடு தற்போது சந்தித்து வரும் சோதனைகளை பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் அரசியலுக்கு தேவையான தலைமை பண்புகள் பற்றியும் விரிவாக விவாதிக்கபட்டது.
நல்லாட்சி மற்றும் நல்ல அரசியல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் …..

Leave a Reply