தனது சொத்துகளை தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்ததாக புகார் அளித்திருந்த நடிகை கௌதமியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அவர்மீது வெளிநாட்டு முதலீட்டை தவறான முறையில் பெற்றதோடு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் நடிகை கௌதமி புகார் எழுப்பியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகப்பன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்யும் வகையில், நடிகை கௌதமி இன்று காலை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும் இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொத்தமாக 7 வழக்குகளின் அடிப்படையில் கௌதமியிடம் 9 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் துவங்கிய விசாரணை, இரவு வரை நீடித்து, முக்கிய சாட்சிகள் மற்றும் தகவல்களைப் பெற்று நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, தேவையான ஆவணங்களை வழங்குமாறு கௌதமிக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



Leave a Reply