, ,

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன்

allu arjun
Spread the love

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். . இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் உட்பட 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போது அதே வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரியும், திங்கட்கிழமை வரை கைது செய்யாமலிருக்கவும் நடிகர் அல்லு அர்ஜூன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் “அல்லு அர்ஜுன் ஒரு நடிகர் என்பதால், அவரது உரிமையைப் பறிக்க முடியாது; ஒரு குடிமகனாக வாழ்வதற்கும் சுதந்திரத்துக்கும் அவருக்கு உரிமை உண்டு” என்று நீதிமன்றம் கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.