,

நகராத புயலால் பெரும் விளைவு சென்னைக்கு எப்போது நிரந்தர தீர்வு

Spread the love

சென்னை தற்போது 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. உலகின் 35 – வது பெரு நகரமாகவும், இந்தியாவின் நான்காவது பெரு நகரமாகவும் திகழும் சென்னை நகரம் , வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.
மெட்ராஸ் என பெயர் கொண்ட இம் மாநகரை 1996 -ல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி “சென்னை” என மாற் றினார். 2011-ம் ஆண்டில் 78 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சென்னையின் தற்போதைய மக்கள் தொகை ,தோராயமாக ஒரு கோடியே 20 லட்சம் பேர்.
மிக்ஜாம் டிசம்பர் 3-ம் தேதி, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள “மிக்ஜாம்” என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு அருகில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
அது கடலோரப் பகுதியை நெருங்கும் என்பதால், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 4,5- ம் தேதிகளில் சூறாவளி காற்றுடன் மிக கனமழை கொட்டும் என அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநில அவசர கால செயல்பாட்டு மையம் தமது பணிகளில்,அதிக அக்கறையுடன் துரிதமாக ஈடுபடத் தொடங்கியது.
இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், புயலின் விபரீதத்தை உணர்ந்து அரசு தேவையான முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகளையும், மண்டல அதிகாரிகளை அந்தந்த பகுதிகளுக்கும் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்
பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது ஊரிலேயே இருக்க வேண்டுமெனவும், தமிழ்நாடு மாநில பேரிடர் படை 200 பேர், தேசிய பேரிடர் மீட்பு படை 225 பேர் தயாராக உள்ளனர் என தெரி
வித்திருந்தார். சென்னையில் 162 நிவாரண முகாம்கள் தயார் எனவும் மக்களை “அலார்ட்” செய்திருந்தார் அமைச்சர். புயலின் நகர்வைகண்காணிக்க சென்னை துறைமுகம், பள்ளிக் கரணை ஆகிய இடங்களில் இருந்து ரேடார் மூலம் 24 மணி நேரமும் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வந்தது.
முதல்வர் மு. க. ஸ்டா லின் தமது சமூக வலைத் தளத்தில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அவரவர் பகுதிகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும் எனவும்,அரசு அதிகாரிகளுக்கு துணை நிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் 144 விரைவு ரயில்களும் ரத்து செய்யப்
பட்டன. பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு உடனடியாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை முதல் இரவு 9 மணி வரை யாருமே எதிர்பாராத வண்ணம் வரலாறு காணாத பெரு மழை கொட்டித் தீர்த்துக்கொண்டே இருந்தது. இடை
விடாத அடை மழை தங்கு தடை இன்றி தொடர்ந்து பொழிந்து கொண்டே இருந்தது.
நகராத புயல் பொதுவாக புயல்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்.ஆனால் மிக்ஜாம் புயல்
நகராமல் கடலின் ஒரு பகுதியிலேயே நின்றிருந்தது இதுதான் சென்னைக்கு வந்த பேராபத்து, பேரழிவு. கிட்டத்தட்ட 18 மணி நேரம் வங்கக் கடலிலேயே நிலை கொண்டிருந்தது அந்த மிக்ஜாம். புயல் நகர்ந்து செல்லும் வேகமும் மிக மிக குறைவாகவே இருந்தது என வானிலை அறிஞர்கள் தெரிவித்தனர்.
புயல் 18 மணி நேரம், ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்ததால் நான்காம் தேதி திங்கட்கிழமை அன்று மழையோ மழை. பேய் மழை. தொடர்ந்து ஐந்தாம் தேதியும் இடைவிடா கன மழை. சென்னை, புறநகர் பகுதிகளை தலைகீழாய் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக 2 லட்சத்
திற்கும் அதிகமான குடியிருப்புகளில் வெள்ளம் அழையா விருந்தாளியாய் ஆர்ப்பரித்து புகுந்ததால், வெள்ளக்காடானது. முக்கிய சாலைகள், குறுக்கு சாலை என அனைத்து பகுதிகளிலும் கழுத்தளவு, மார்பளவு தண்ணீர் தண்ணீரே….
மடிப்பாக்கம், மேடவாக்கம், சித்தலப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், வரதராஜ
புரம், மதுரவாயல், முகலிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை வெள்ளம் எளிமையாக புகுந்தது. இதனால் செய்வது அறியாது தவித்தகுடியிருப்பு வாசிகள் துணிமணிகள், ஆவணங்கள், பணம் உள்ளிட்ட முக்கிய
மானவைகளை அள்ளிக்கொண்டு, மேல் தளங்களில் உள்ள நண்பர்கள், உறவி
னர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். பேய் மழை காரணமாக அந்தந்த பகுதி
களில் மின்தடை செய்யப்பட்டது. மழையினால் மின் விபத்தை தடுக்கும் பொருட்டு,மின்சார வாரியம் ஆங்காங்கே மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தது. மீனம்பாக்கத்தில் 45 சென்டி
மீட்டர் மழை அளவும், பெருங்குடியில் 44 சென்டி மீட்டர் மழை அளவும் பெய்தது. இது கடந்த 43 ஆண்டுகளில் காணாத மழை என சென்னைவாசிகள் பலரும் மிகுந்த வேதனையோடு தெரிவித்தனர்.
வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருந்ததால், வெளியே வர முடியாத பெரும் அவலமோ அவலம். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் 3,4 நாட்களாக சொல்லனா துயரத்திற்கு ஆளாயினர்.
கடல் கொந்தளிப்பு இரண்டு நாட்கள் இடைவிடாத அடை மழையால், வங்கக்கடல் கொந்
தளிப்பாகவே இருந்ததால்,ஆறுகளில் செல்லும் மழை நீர் கடலில் கலக்க வழி இல்லாமல் போனது.
அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகளின் வழித்தடங்களில் பெருக்கெடுத்த நீர், கடல் கொந்தளிப்பு காரணமாக கடலுக்குள் செல்ல முடியாமல் நகரின் நாலா பகுதி
களிலும் புகுந்து, குடியிருப்பு வாசிகளை துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியது. இதைத்தான் அமைச்சர் துரைமுருகன், நீர்வழிப் பாதையை அடைத்தால் அது கோபம் கொள்ளும் என தெரிவித்திருந்தார். மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் அடித்ததால்,பற்பல மரங்கள் முறிந்தன.
6-ம் தேதி வாக்கில் மழை மெல்ல மெல்ல நின்ற போது,மக்களின் துன்பமும் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது. மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை; பால் இல்லை என்ற கூக்குரலும், அழு குரலும் அனைத்து பகுதிகளிலும் காணப்பட்டது.
தாங்கள் அனுபவிக்கும் வேதனை தெரியாமல் அதிகாரிகளும் அமைச்சர்களும் இருப்பதாக பொது மக்கள் ஆங்காங்கே புகார் தெரிவித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஆளும் கட்சியினர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே அதிக நேரம் செலவிடுகின்றனர் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
3,4 நாட்கள் ஆகியும் வெள்ள நீர் வடியாததால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாத பெரும் சூழ்நிலை கைதியாகினர். இதனால் பால் குடிநீர் காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.பால் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலையை காணும் பொழுது பரிதாபமாக இருந்தது.
அம்பத்தூர் பால் நிறுவனத்தில், மழைநீர் புகுந்ததால் பால் வினியோகம் தடையாக உள்ளது எனவும் பிற மாவட்டங்களில் இருந்து ஆவின் பால் வருவதற்கு பல நடைமுறை சிக்கல்
கள் இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவ்வப் போது தெரிவித்துக் கொண்டே இருந்தார் .
பால் அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றி கிடைப் பதற்காக எட்டு ஆவின் மையங்கள் மூலம், 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆங்காங்கே நிவாரண பொருட்களை அளித்துக் கொண்டு இருந்தாலும், வேளச்சேரி, பள்ளிக்கரனை, வண்டலூர், முகலிவாக்கம், மாதவரம், முடிச்சூர், வரதராஜபுரம் , மதுரவாயில் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாத நிலையை காணப் படுகிறது. இப்பகுதிகளில் அதிகாரிகளோ, ஆளும் தரப்பினரோ வரவே இல்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அமைச்சர்களை முற்றுகைவெள்ள நீர் வடியாத பகுதிகளிலும், குடிநீர், பால், உணவு இன்றி தவிக்கும் இடங்களிலும் செல்லும் அமைச்சர்களையும், மக்கள்பிரதிநிதிகளையும் பொது
மக்கள் ஆங்காங்கே முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங், வெள்ள சேதங்களை பார்வையிட்டு, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு, அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என அவர்
தெரிவித்தார். சென்னையில் இருந்த ஏரி பகுதிகளில்,அடுக்குமாடி குடியிருப்பு களை அதிக அளவு அனுமதி அளித்ததே, சென்னை வெள்ளத்திற்கு காரணம் என வழக்கமான குரல்கள் ஒலித்
துக் கொண்டே இருக்கிறது. இயற்கையை வெல்ல எவராலும் முடியாது என்றாலும், மழை வெள்ள பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத அனைவரின் ஏகோபித்த எதிர் பார்ப்பு.