தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முதன்மையான தீர்மானமாக, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை குறித்த கண்டனம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அண்மையில் பீஹாரில் நடைமுறைக்கு வந்த இந்த உத்தரவு, குடியுரிமையை சந்தேகிப்பதாகவும், மக்களின் உரிமைகளை பாதிப்பதாகவும் பிரதான தேசிய கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கு எதிராக தவெக மாநாட்டில் தீர்மானம் நிறைவேறவுள்ளது.
அதேபோல், தூய்மை பணியாளர்கள் போராட்டம் – குப்பை அள்ளும் ஊழியர்கள் வேலை நிறுத்தியதால் தமிழகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கான ஆதரவு தீர்மானம் நிறைவேறுகிறது. தொடர்ந்து, லாக்கப் மரணங்கள் குறித்த தீர்மானமும் நிறைவேறவுள்ளது. காவல்துறை வன்முறைகளால் உயிரிழந்தவர்கள் குறித்த விவகாரத்தில், விஜய் முன்னதாகவே தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள மற்ற தீர்மானங்கள்:
-
அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
-
நெசவாளர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்க வேண்டும்.
-
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு பதிவு செய்யப்படும்.
-
இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்குப்புறம், கவின் ஆணவக் கொலை குறித்தும் மாநாட்டில் விவாதம் எழலாம் என்று தவெகவினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாட்டில், தீர்மானங்கள் மூலம் மக்களோடு நெருக்கமாக நிற்கும் அரசியல் வியூகம் விஜயால் வெளிப்படுத்தப்பட உள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.



Leave a Reply