

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வணிக வளாகம் கட்டப்பட்டது. 29 கடைகளாக உள்ள அந்த வளாகத்தினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில்
வாடகைக்காக ஓபன் ஏலம் விடப்பட்டது.இதில் வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கூறியதால்,26 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடைகளின் வாடகை நிர்ணயிக்கப்பட்டது.
பேரூராட்சிக்கு வருமானம் வரும் என்பதால், பேரூராட்சி நிர்வாகம் இந்த அதிக தொகை வாடகையினை ஏலம் எடுத்தவர்களிடம் செலுத்துமாறு அறிவுறுத்தினர்.மேலும் டெபாசிட் தொகையினையும் செலுத்த கூறினர்
29 கடைகளையும் வாடகைக்கு எடுத்தவர்கள், கடை கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே வாடகை செலுத்தி விட்டு போதிய வருமானம் இல்லாததால் திணறினர்.
இதனால் கடைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அந்த வணிக வளாகத்தில் கடையின் 1, 2 உள்ளிட்ட 4 கடைகளை எடுத்த வாடகைதாரர் வாழை மா. ,பாபு கூறுகையில் ,
பேரூராட்சி கடையினை வாடகைக்கு எடுத்து பிழைப்பு நடத்தலாம் என எண்ணத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு நான்கு கடைகளை மிக அதிக தொகை வாடகையில் எடுத்தோம்.
அதில் ஒரு கடையை மட்டும் பயன்படுத்தி வந்தோம்.என்றாலும் மற்ற கடைகளுக்கும் வாடகை செலுத்தினோம்.
இந்நிலையில் பேரூராட்சி கூட்டத்தில் திடீரென கடை வாடகை மாதம் ரூ.12,500 நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த தீர்மானத்தின் படி மீண்டும் ஏலம் விடப்பட உள்ளதால்,கடைகளை காலி செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகம் வற்புறுத்தினர். இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தோம். ஐகோர்ட் மனுதாரருக்கு உரிய நியாயம் வழங்கும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் ,எனது கட்டுப்பாட்டில் உள்ள 4 கடைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.
மற்ற கடைகளை சாதாரணமாக பூட்டி உள்ளனர்.
அதிக வாடகை தொகையை மாற்றி அமைத்து ரூ.12,500 நிர்ணயம் செய்ய விதி இருக்கும் போது,ஏற்கனவே ஏலம் எடுத்த எங்களுக்கே குறைந்த வாடகைக்கு விட பேரூராட்சி நிர்வாகம் மறுக்கிறது. இதில் ஆளும் திமுக தரப்பினர் அழுத்தம் கொடுப்பதன் காரணமாகவே எங்களைப் போன்றோரின் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
வணிக வளாகத்தில் உள்ள இருக்கின்ற அனைத்து கடைகளுக்கும் ஒரே மாதிரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.இதற்காகத்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அங்கு நியாயம் கிடைக்கும் பொழுது, பேரூராட்சி நிர்வாகம் வெட்கி தலைகுனியும் நிலைமை வரும். நியாயம் என்றுமே வெற்றி வரும் என தெரிவித்தார்.
Leave a Reply