தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2 குறித்து விவாதத்தின் போது பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, கோவை,திருப்பூர், ஈரோடு விவாசாயிகள் பயன்படும் வகையில் அத்திக்கடவு திட்டம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் – 2 எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப் பட்டது. விடுபட்ட குளங் களுக்கு நீர் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. என்னுடைய தொண்டா முத்தூர் தொகுதிக்குட்பட்ட 90 குளங்களும் அதில் வருகிறது.
ஆனால், அந்த திட்டம் அதற்கு பிறகு நிதி ஒதுக்aகப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், அந்த திட்டத்தை நிறைவேற்ற நீர்வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு உறுப்பினர் சொல்லும் இந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதி 90 குளங்களுக்கு அத்திக்கடவு-அவினாசி 2 திட்டம் மூலம் தண்ணீர் எஸ்.பி வேலுமணி கேள்விக்கு அமைச்சர் பதில்

Leave a Reply