கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரை பேரூராட்சி, பூலுவபட்டி பேரூராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, மத்துவராயபுரம் ஊராட்சி, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் கலையரங்கம் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும், பயணிகள் நிழற்குடை அமைக்கவும், சாக்கடை கால்வாய் அமைத்தல், தடுப்புச் சுவர் அமைத்தல், தார் சாலை அமைக்கவும், மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய ஓடுதளப்பாதை அமைக்கவும், ஃபேவர் பிளாக் அமைக்கும் பணிகளையும் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை து0வக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் என்.கே. செல்வதுரை, மாவட்ட பொருளாளர் என்.எஸ். கருப்புசாமி, அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஜிகே.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டி.பி.வேலுச்சாமி ராஜா என்கிற ராமமூர்த்தி, டி. சக்திவேல், கே.ஜெயபால், மோகன்ராஜ், சதானந்தம், பேரூராட்சி செயலாளர்கள் ஏ.சுந்தர்ராஜ், ஏ.விஜயகுமார், ரவி என்கிற காளிசாமி, கே.எஸ். சங்கர், ஆடலரசு, நல்லறம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சார்பணி மாவட்ட நிர்வாகிகள் கருடா சுரேஷ், வி.நிஷ்கலன், டி.லட்சுமிகாந்தன், வக்கீல் சுரேஷ்குமார், யோகேஸ்வரன், டிசி.பிரதீப், பிரகாஷ் கலந்து கொண்டனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி



Leave a Reply