தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளிலும் மற்றும் தொண்டாமுத்தூர், வேடப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் ரூ. 1.18 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவைப்புதூர் எக்ஸ் பிளாக், செந்தமிழ் நகர், பால்பண்ணை வீதி ஆகிய இடங்களில் நியாய விலை கட்டிடங்களை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டிபாளையம் சம்ப் வளாகத்தில் நடைபாதை அமைக்கும் பணிக்கும், சத்யா நகரில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குழாய்கள் அமைக்கும் பணிக்கும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் அண்ணாநகர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கும், அட்டுக்கல் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.00 லட்சம் மதிப்பில் நவீன சமுதாயக் கழிப்பிடம் கட்டும் பணிக்கும், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்ப் செட் அமைக்கும் பணிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
அதோடு, முத்திபாளையத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் தங்கு தடையின்றி மக்கள் நலப்பணிகள்; எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமிபூஜை!

Leave a Reply