கோவை மாவட்டம் தொண்டாமுத் தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேவைப்பட்ட நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சென்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதையடுத்து அதற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் ஆகியோர் வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தொண்டா முத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, மற்றும் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி கே.விஜயகுமார், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.கே.கார்த்திகா பிரகாஷ், செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கே.ஜெயபால், சின்னச்சாமி, துரைசாமி, செல்வம், சின்னத்துரை, பாசறை மாவட்ட தலைவர் வி.நிஷ்கலன் தேவராயபுரம் பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜே.சதீஷ், திருமூர்த்தி, மற்றும் பேரூர் செட்டிபாளையம் பிரசாத், ஜவகர் ராமகிருஷ்ணன், ராஜாமணி, சண்முகம், பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் வேளாண் விரிவாக்க கட்டிடம் நில ஒதுக்கீடு ஆவணத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் வேலுமணி

Leave a Reply