,

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர்

தைப்பூசம்
Spread the love

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணியில் கதிர் அறுப்பு திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற 64 திருவிளையாடல் புராணத்தில் சிந்தாமணியில் உள்ள விவசாயி அறுவடைக்கு தயாரான நெற்களை அறுக்க முடியாமல் தவித்த போது கடவுள் சுந்தரேஸ்வரர் விவசாய கூலிகளாக வந்து நெல் அறுவடை செய்து கொடுத்த நிகழ்வையை கொண்டாடும் விதமாக சிந்தாமணி பகுதியில் தைப்பூசத்தின் 13 ஆவது நாள் கதிர் அறுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற கதிர் அறுப்பு திருவிழாவில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க பல்லாக்கில் கதிர் அறுப்பு மண்டபம் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து, சிந்தாமணி பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சிந்தாமணி சாமநத்தம், பனையூர், வில்லாபுரம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்..
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராசன், இணை ஆணையர், கிருஷ்ணன் மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்து இருந்தனர்.