இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான உடன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விவரித்தார். வங்கி கணக்கில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், வங்கிக்கணக்கில் திடீரென ஏற்படும் அளவுக்கதிகமான பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், வங்கிப் பணத்தினை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களை வங்கி வாகனங்களில் வைத்திருக்கவும் மாவட்ட ஆட்சியர்அறிவுறுத்தினார்.
மேலும் அச்சக உரிமையாளர்களிடம் அரசியல் கட்சியினர் வேட்பாளர் பிரச்சாரம் தொடர்பான பிரசுரங்களை அச்சடிக்கும் போது அதன் நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், அச்சடிக்கப்படும் அனைத்துப் பிரசுரங்களிலும் அச்சக உரிமையாளர் விவரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்ட விதிமுறைகளின்படி தொடர்புடைய அச்சக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல் பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடும் போது உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply