, ,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ கண்டிப்பாக நடைபெறும் – தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு

Kranti Kumar Pati
Spread the love

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரும் 18 ஆம்  தேதி பிரதமர் மோடியின் ரோட் ஷோ கண்டிப்பாக நடைபெறும் என்று  கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவையில் கிராந்தி குமார் பாடியிடம் செய்தியாளர்கள்.வரும் 18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பாரத பிரதமர் மோடிக்கு, தேர்தல் நடத்தை விதிகள் பொருந்துமா என்ற கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பிரதமருக்கு உண்டான இசட் பிளஸ் பாதுகாப்பு, எஸ்பிஜி மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்புடன் நன்னடத்தை விதிகளின்படி அனுமதி உள்ளது என்று கூறினார்.