இந்தியாவின் 18-வது பொதுத் தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் ஏற்பாடு செய்து ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட உள்ளது.
தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனிப்பட்ட காரணங்
களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து, கேரளாவை சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஞானேஸ்
குமார், பஞ்சாப் மாநில ஓய்வு பெற்ற
ஐஏஎஸ் அதிகாரி சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமக்கு சாதகமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி தலைமை
யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புதிதாக இணைந்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சி இரண்டு கட்டங்களாக 267 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத் காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் களம் காண்கிறார்கள்.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும், ஹமார்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும், பெங்களூர் தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யா,கர்நாடக மாநிலம் ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ,
சிமோகா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் பா.ஜ.க இம்முறை இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பினை வழங்கியுள்ளது.
கருத்துக் கணிப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக 370 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறும் எனவும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமரும் என தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சினை மெய்ப்பிக்கும் வகையில், பெரும்பாலான ஊடகங்கள், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என தெரிவித்துள்ளன.
இவ்வார இறுதியில் வெளியான நியூஸ்-18 தொலைக்காட்சியின் அகில இந்திய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவில் உள்ள மொத்த 534 பாராளுமன்ற தொகுதிகளில் 411 இடங்களை தேசிய ஜனநாயக முன்னணி பெற்று நரேந்திர மோடியே உறுதியாகப் பிரதமராக வருவார் என வெளியிட்டுள்ளது.
இண்டியா கூட்டணி 105 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும்,மற்ற கட்சிகள் 27 இடங்களைப்பிடிக்கும் என்றும் நியூஸ் -18 தொலைக்காட்சி கணிப்பினை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ்
பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இண்டியா கூட்டணியில், கூட்டணி தொடங்கப்பட்ட போது இருந்த வேகம் மெல்ல, மெல்ல குறைந்தது.
சரியான ஒருங்கிணைப்பும், வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தால் , இண்டியா கூட்டணி வலுவிழந்து காணப்படுகிறது.பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்தி அந்தந்த மாநில கட்சிகளே தனித்து போட்டியிடுகிறது.
உதாரணமாக மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதனால் குறைந்த தொகுதிகளிலேயே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 82 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், ஜலே தொகுதியிலும், திருவனந்தபுரத்தில் சசி தரூரும் போட்டியிடுகின்றனர்.
தெலுங்கானா, கர்நாடகா, கோவா, சத்தீஷ்கர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் உடனான தொகுதி பங்கீடு திருப்திகரமாக உள்ளதாக கட்சியின் தலைவர் மல்லிகாஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பாகவே மற்ற மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு, சுமூகமாக முடிவடையும் எனவும் நம்பிக்கையுடன் கார்கே தெரிவித்துள்ளார்.
தமிழகம்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை முடிவடைந்த, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய எம்பி. நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய இரு தொகுதிகளிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் திண்டுக்கலில் சச்சிதானந்தம், மதுரை சிட்டி எம்பி வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடு கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் பத்து தொகுதிகளிலும், திமுக 21 தொகுதிகளிலும் களம் காண தயாராக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி,ஓபிஎஸ் அணி உள்ளிட்டவைகள் போட்டியிடுகின்றன.
இக்கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ,அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது.
கோவை பாராளுமன்றம்
தற்போதைய சிட்டிங் எம்பியாக உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியே கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று இருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை களம் இறக்க டெல்லி மேலிடம் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவவே, ஆளும் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது. அக்கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்தி, தளபதி முருகேசன், ஐடி பிரிவு நிர்வாகி டாக்டர் மகேந்திரன், மருத்துவ அணியை சார்ந்த டாக்டர் கோகுல், தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் தோல்வியுற்ற கார்த்திகேய சேனாதிபதி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சர்மிளா சந்திரசேகர்,பீளமேடு பகுதியை சார்ந்த விக்னேஷ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
பாஜக சார்பில் தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடக் கூடும் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் பி.எஸ். செல்வகுமார் ஆகியோரும் லிஸ்டில் உள்ளனர்.
பொதுத்தேர்தல் திருவிழாவில், மக்களால் வெற்றி பெற்று மக்களவைக்குச் செல்லும் அனைவருமே மகத்தானவர்கள்.
தேர்தல் திருவிழா: மக்களவைக்கு செல்லும் மகத்தானவர்கள்

Leave a Reply