தேமுதிக பொதுச்செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்து தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார். இக்கூட்டத்தில், அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்து தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Reply