தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூன் 1, 2024 அன்று முடிவடைந்தது. பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் விஜயபாரதி சயானி அதன் இடைக்கால தலைவராக உள்ளார்.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக வி.ராமசுப்பிரமணியனை கடந்த வாரம் தேர்வு செய்து நியமித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ராமசுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். ராமசுப்ரமணியன் ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.



Leave a Reply