அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 13 வது மாநாடு, பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்ற
முப்பெரும் விழாவில்
தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார் சேவையை பாராட்டி
கோல்டன் விருது
மற்றும் சிறந்த சேவைக்கான விருதை
தமிழ்நாடு பொதுப்பணித்துறை
அமைச்சர்
ஏ வ வேலு அவர்களும்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
அமைச்சர் முத்துசாமி அவர்களும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்களும் இணைந்து வழங்கிய போது..
பெயிரா கூட்டமைப்பின் முப்பெரும் விழா.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா (மைய – மாநில அரசுக்கு நன்றி பாராட்டு விழா, 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் காலண்டர் – டைரி வெளியிட்டு சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கும் விழா) திருவண்ணாமலை மாநகரம் தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள “மாதவி பன்னீர்செல்வம்” மஹாலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன் பரந்தாமன் வரவேற்புரையில், மாவட்ட தலைவர் நரேஷ் சந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார், மனோ முருகன், சாகுல், ராம்காந்த், ஜெய்சங்கர், கோபிநாத், நாகராஜ், லோகேஷ், கண்ணன், நகர பொறுப்பாளர்கள் கங்காதரன், அக்பர் பாஷா, வாசுதேவன், சீனிவாசன், ராஜா, ஷா நவாஸ், ஆகியோர்களின் முன்னிலையில், நகரத் தலைவர் வெங்கடேசன் நன்றி உரையில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தேசிய தலைவர் சிறப்புரையாற்றினார் இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. எ. வ. வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர், திரு. எ.வ.கம்பன், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி.என்.அண்ணாதுரை, மேயர் திருமதி. நிர்மலா கார்த்திக் வேல்மாறன், சட்டமன்ற உறுப்பினர் திரு.கிரி, மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் திரு. பன்னீர்செல்வம். ஆகியோர்கள் கலந்துகொண்ட இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில்.. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் நிறைவேற்றிய 2500 சதுர அடி பரப்பளவு உள்ள மனையில் ஏழு மீட்டர் உயரத்திற்கு 3500 சதுர அடி வரை கட்டப்படும் தரைதளம் மற்றும் முதல் தளம் கட்டடத்திற்கு உடனடி அனுமதி பெறும் திட்டம், 750 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் மூன்று அடுக்குகள் வரை கட்டப்படும் எட்டு அலகு வீடுகளுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு, அதேபோன்று வணிக கட்டடங்கள் 300 சதுர மீட்டரில் கட்டப்படும் மூன்று அடுக்குகளுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு, தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டப்படும் கட்டிடங்களுக்கு உயரம் 12 மீட்டரலிருந்து 14 மீட்டர் வரை உயரம் அதிகரிப்பு, 2016 ஆம் ஆண்டு வரை அனுமதியற்ற முறையில் பதிவு செய்துள்ள பட்டா மனைகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக தீர்வு, கிராம நத்தம் மனைகளுக்கு அனுமதி பெறுவதில் சலுகை, கட்டிட திட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் இனங்களில் முந்தைய ஆவணங்கள் கேட்பதில் இருந்து விலக்கு, புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு அணுகு சாலையில் சலுகை, ஒற்றைச்சாளர முறையில் கட்டடம், மனைப்பிரிவு, உட்பிரிவு உள்ளிட்ட அனுமதிகள், மாநிலம் முழுவதும் புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள், ஒருங்கிணைந்த முழுமை திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும், வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த திட்டமிட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ள 18000 ஏக்கர் நிலங்களை விடுவித்தமைக்கும், பதிவுத்துறையில் உதவி மையம், சேவை மையம் போலி ஆவண தடுப்பு நடவடிக்கைகள், மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் திட்டம், புதிய மண்டல, மாவட்ட, பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட திட்டங்களையும், வருவாய்த்துறையில் எங்கிருந்தும் எந்நேரத்திலும் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் எட்டாம் திட்டம் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் திட்டம், வீட்டுமனை பிரிவுக்கு மொத்தமாக பட்டா மாறுதல் திட்டம், கிராம நத்தம் மனைகளை இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும் மைய அரசுக்கு மலிவு விலை கட்டிட திட்டங்களுக்கு வருமான வரியில் விலக்கு வேண்டியும், கட்டுமான பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை தங்கத்துக்கு நிகராக குறைக்க வேண்டியும், வருமானத்தின் மீதான வரிப்பிடித்தத்தின் வரம்பை உயர்த்த வேண்டியும், முதல் மற்றும் இரண்டாம் வீடுகளை வங்கியில் கடன் பெற்று வாங்குபவர்களுக்கு வருமான வரியில் சலுகை வேண்டியும், அதன் வரம்பை உயர்த்த வேண்டியும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வீடு கட்டும் அனைவருக்கும் முன்கூட்டியே மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டியும்,
அதேபோன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில், ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியும், உடனடி அனுமதி பெறும் திட்டத்தில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் நான்கு வீடுகள் மற்றும் 9 மீட்டர் உயரம் என மாற்றம் செய்ய வேண்டியும், நகர் புறங்களில் ஏற்கனவே உள்ள பழமையான சாலைகள் வழியாகவும், மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவுகளில் அமைந்துள்ள சாலைகளின் வழியாகவும் பின்புறம் அமைந்துள்ள நிலங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு அணுகு சாலைகளின் அளவினை குறைத்திட வேண்டியும், ஒரு எட்டேருக்குள் அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக சலுகை வேண்டும், ஐந்து மாடி உயரம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதில் ஆந்திராவைப் போன்று சலுகை வேண்டியும், கட்டடங்கள், மனைப்பிரிவு, உட்பிரிவு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கும் அதிகார வரம்பை உயர்த்தி துணைக் குழுக்களான உள்ளாட்சிகளுக்கு வழங்கிட வேண்டியும், அதேபோன்று உள்ளாட்சியிடம் இறுதி ஒப்புதல் பெறுவதற்கு இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டியும்,
பதிவுத்துறையில் மக்களுக்கு உதவாத பல்வேறு சட்டப்பிரிவுகளை மாற்றம் செய்ய வேண்டியும், பல்வேறு திட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும், நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், புதிய வீட்டுமனை பிரிவில் மின்சார வாரியத்திற்கு தானமாக ஒப்படைக்கும் ஒதுக்கீடு நிலத்திற்கு முத்திரைத் தீர்வை விலக்குக் கோரியும், முரண்பாடான வழிகாட்டி மதிப்பினை களைய வேண்டும் எனவும், அதிகமாக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் பதிவு அலுவலகத்தை இரண்டு அலுவலகங்களாக பிரித்தோ அல்லது கூடுதல் அலுவலர்களை நிரந்தரமாக நியமித்தோ, தீர்வு காண வேண்டும் எனவும், தங்கு தடையற்ற மின்சாரமும், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பும் மற்றும் அதிநவீன இணையதள இணைப்பும் தேவை எனவும், பதிவுத்துறை இணையதளத்தில் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டியும், தடை செய்யப்பட்ட நிலங்கள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படையாக பதிவு செய்யும் நேரத்தை மாலை 5.30 மணி வரை நீடிக்க வேண்டும் எனவும், ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டு முன்பதிவு செய்து பணம் செலுத்தி பதிவு செய்ய இயலாத சூழ்நிலையில் அந்த பணத்தை ரயில்வே துறை போன்று உடனடியாக திரும்பி ஒப்படைக்க வேண்டும் எனவும், குறைபாடு உள்ள பணத்தை பார்கோடு மூலம் செலுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பதிவு துறைக்கு பணம் செல்லாமல் பாதியில் நிற்கும் பரிவர்த்தனைக்கு பதிவுத்துறை பொறுப்பேற்று அன்றைய தினமே அந்த ஆவணத்தை குறைந்தபட்சம் (முடிவுறா ஆவணமாக) பெண்டிங் டாக்குமெண்டாக பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும்,
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து விண்ணப்பித்து நிலுவையில் உள்ள 2630 திட்டங்களை உடனடியாக பதிவு செய்து உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனைப் பிரிவிற்கு ஏழு நாட்களுக்குள்ளும் கட்டடங்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் காலதாமதம் இன்றி பதிவு செய்து உத்தரவு வழங்க வேண்டும் எனவும், ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து ஒப்புகை சீட்டுப்பெற்று அதன் அடிப்படையில், பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் திட்டங்களுக்கு விதிக்கப்படும் முறையற்ற தண்டத் தொகையை ரத்து செய்ய வேண்டும் எனவும், புதிதாக அமைக்கப்படும் மனைப் பிரிவின் வழியே செல்லும் தொலைதொடர்பு மற்றும் மின் தளவாடங்கள் மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்தி ஒப்புகை சீட்டை சமர்ப்பித்தால் பதிவு செய்து உத்தரவு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களையும்,
வருவாய்த் துறையில் இணையதளம் வாயிலாகவே இலவசமாக பொதுமக்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்கவும், வீட்டுமனை பிரிவில் மொத்தமாக உட்பிரிவு செய்யும் திட்டத்தில் உள்ள காலதாமதம் உள்ளிட்ட சிக்கல்களை களையவும், இணையதளத்தில் கிராம நத்தம் நிலங்கள் சம்பந்தமான பதிவேற்றத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும், தானியங்கி பட்டா மாற்றத்தில் உள்ள பிரச்சனைகள் சிக்கல்களை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
மேலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கென தனி கோரிக்கைகளாக,
நினைத்தாலே முக்திதரும் வரலாற்று சிறப்புமிக்க திருவண்ணாமலை மாநகரத்திற்கு பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருகை தரும் நகரங்கள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த நகரத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சுற்றளவுக்கு வீட்டுவசதித்துறை ஒருங்கிணைந்த முழுமை திட்டத்தின் எல்லையை (MASTER PLAN) விரிவுபடுத்தி ஆகச் சிறந்த அடிப்படை கட்டமைப்புகளை அமைப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அதேபோன்று தற்போதுள்ள 13.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாநகராட்சியில் பொதுமக்கள் பெருமளவில் வசிக்கும் மிக அடர்த்தியான பகுதியை கண்டறிந்து அதனை TNCDBR-2019, விதி எண் 30 ( 1 ) இன் கீழ் (CBA) தொடர் கட்டிட பகுதியாக அறிவித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட தாங்கள் வழிவகை செய்ய வேண்டும் எனவும்,
திருவண்ணாமலை மாநகரம் புராதன கோயில் நகரம் என்பதாலும், மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமம் (HACA) மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாடு (ASI) உள்ளதாலும், 9.0 மீட்டர் உயரம் வரை அதாவது G+2 தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் வரைக்கும் தான் அனுமதியுடன் கட்டடம் கட்ட முடிகிறது. இங்கு நிலம் விலை அதிகம் என்பதாலும், இந்த கட்டுபாடுகளாலும் அனுமதியற்ற கட்டடங்கள் இங்கு அதிகம் உருவாகி வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, திருவண்ணாமலை மாநகரத்தில் உள்ள மலைகள் மற்றும் கோயில்களின் எல்லையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு இந்த விதிகளை அமல்படுத்தி, மற்ற பகுதிகளுக்கு இந்த விதிகளை தளர்த்தி கீழ் தளம், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுக்கு 12 மீட்டர் உயரம் வரை அனுமதி கிடைக்கும் வகையிலும், இந்த மாநகரத்தில் ஏற்கனவே அனுமதியற்ற வகையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை “கட்டட வரன்முறை சட்டத்தின் கீழ்” அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும், திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் 2 அலுவலகத்தில் வருடம் ஒன்றுக்கு 20,000 முதல் 30,000 வரை ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதினால் மேற்படி சார்பதிவாளர் அலுவலகத்தினை இரண்டாக பிரித்து திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் அலுவலகம் 3 என ஒரு புதிய அலுவலத்தினை வேங்கிக்கால் கிராமத்தில் ஏற்படுத்திட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோன்று மங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருடத்திற்கு 2800 ஆவணங்களே பதிவாகின்ற நிலையில் மேற்கண்ட மங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தினை திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் 3 அலுவலகத்துடன் இணைக்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை இணை சார்பதிவாளர் 2 அலுவலகத்தில் சார்பதிவாளர் நிலையில் உள்ள இரண்டு அலுவலர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் மேற்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தரமாக சார்பதிவாளர் அலுவலர்கள் இல்லாமல் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதிய சார்பதிவாளர் அலுவலர் பொறுப்பு நிலையில் பணிபுரிந்து வருகின்ற அவல நிலையில் இங்கு உள்ளது. இதனால் பொது மக்கள் பல மணி நேரம் காத்திருந்தும் மற்றும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களும், கைக்குழந்தையுடன் உள்ள பெண்களும் மற்றும் ஊனமுற்றவர்களும் பதிவுக்கு வரும் போது ஒரு நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதிதாக ஏற்படுத்தும் மனைப்பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் நிர்வாகம் அவர்களிடம் அணுகும்போது சுற்றியிருக்கும் புல எண்களில் தோராயமாக ரூ.100/- மதிப்பு உள்ளது என்ற நிலையில் மாவட்ட பதிவாளர் அவர்களால் மூன்று, நான்கு மடங்கு அதிகமாக ரூ.400/- முதல் ரூ.500/- வரை மனைப்பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோன்று கட்டிட திட்டங்களுக்கு உச்சபட்ச கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் மதிப்பு நிர்ணயத்தால் பொதுமக்கள் கூடுதலாக முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம், கூடுதல் வருமான வரி, மூலதன ஆதாய வரி, வருமானத்தின் மீதான வரி பிடித்தம், சரக்கு மற்றும் சேவை வரி போன்ற பலவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று சுற்றியுள்ள புல எண்களில் எவரேனும் ஒருவர் வங்கியில் கடன் பெறுவதற்காக அதிக தொகையினை கைமாற்று தொகையாக காண்பித்து பதிவு செய்யப்படும் ஒரு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் புதிய மதிப்பு நிர்ணயம் செய்வதை தவிர்க்க வேண்டும், உச்சபட்ச மதிப்பிற்கு குறைந்தபட்சம் 10 ஆவணங்களை பதிவு செய்தால் இது சம்பந்தமாக பதிவுத்துறை துணை தலைவர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தலாம், மாறாக எல்லா ஆவணத்திற்கும் மேல்முறையீடு செய்ய சொல்வது ஏற்புடையதாக அல்ல, ஆகவே தாங்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை நகரத்தை மாநகராட்சியாக தர உயர்த்தி, எல்லையை விரிவாக்கம் செய்து இத்துடன் 18 கிராமங்களை இணைத்துள்ளனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் பல புதிய மாநகராட்சிகள் உருவாக்கியுள்ளன, இப்படி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு பிந்தைய 13 அரையாண்டு காலி இடத்திற்கான நிலவரி (vacant land tax) இந்தப் பகுதியில் திட்டங்களை அபிவிருத்தி செய்யும் போது வரும். இந்த வரியை செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கும், தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் (DC) பஞ்சமி நிலங்கள் அதிகம் உள்ளது. பொதுவாக பதிவு அலுவலகத்திற்கு எந்த நிலத்தை பதிவு செய்ய சென்றாலும் அது பஞ்சமி நில வகை பாட்டில் உள்ளது என பொத்தம் பொதுவாக தெரிவித்து பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே நிரந்தரமாக பஞ்சமி நிலங்களின் பட்டியலை அனைத்து பொதுமக்களும் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டு அதன் அடிப்படையில் பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருவேளை பஞ்சமி நிலங்களை பட்டியல் சாதியினர் அல்லாமல் வேறு சாதியினர் பெயரில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வாங்கப்பட்டிருந்தால், அது குறித்து தடையின்மை சான்று பெறுவதற்கோ அல்லது மீண்டும் பட்டியல் சாதியினர் பெயரில் பதிவு செய்வதற்கோ தாங்கள் வழிவகை செய்ய வேண்டும் எனவும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் கோட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்றவர்களிடத்தில் மேற்கண்ட பஞ்சமி நிலங்கள் சம்பந்தமான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தாலோ, வேறு வருவாய்த்துறை சம்பந்தமான சேவைகளை பெறுவதற்கு விண்ணப்பித்தாலோ ஆண்டு கணக்கில் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடுகின்றனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ளது. பொதுமக்கள் விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பங்களின் மீதும் அதிகபட்சம் முப்பது நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2006 – 2011 காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் வீடற்ற மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச பட்டாக்கள் மூலம் நிலங்களும் மனைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல பொதுமக்களுக்கு நிபந்தனையுடன் இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது. இதன் நிபந்தனை காலம் 30 ஆண்டுகள் என்பதால், நிபந்தனையுடன் இலவச இடங்களை ஒதுக்கீடு பெற்ற பொதுமக்கள் அவர்களின் அவசர தேவைக்கு அதனை விற்பனை செய்ய இயலவில்லை. ஆகவே இந்த 30 ஆண்டுகள் என்கிற நிபந்தனை காலத்தை தளர்த்தி, பன்னிரண்டு ஆண்டு காலம் நிபந்தனை காலம் என மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
தனிநபருக்கு சொந்தமான நிலங்கள் மத்தியில் கோயில் நிலங்கள் அதிகம் வருவதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் கோயில் இடங்களுக்கு இணையாக இரண்டு மடங்கு நிலங்களை தனி நபர்கள் கொடுக்க தயாராக இருக்கும் பட்சத்தில், அவற்றை பரிவர்த்தனை ஆவணங்கள் மூலம் எளிய முறையில் மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.
மேலும் இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் ஜமாலுதீன், கமல் சந்த், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், E.N. நாராயணன், J.ஹனீப், ராஜேஷ்குமார், சக்தி பிரசன்னா, தனசேகரன், செங்கம் ஆனந்தன், சீனிவாசன், விக்னேஷ், எடத்தெரு விஜயராஜ், உதய சங்கர், மூகாம்பிகை மனோகரன், விஷால், K.K.S.மணி, பதம் சந்த், கஜேந்திரன், வினோத், சிவா, விமல், தர்மராஜ், குணால் சந்த், நகராஜ் செட்டியார், ஹர்ஷத், மாணிக்கம், அரிசி ஆனந்த், போளூர் ராஜேஷ், வினோத் உள்ளிட்டவர்களும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு பொறுப்பாளர்கள் திரு செந்தில்குமார், ஜெயச்சந்திரன், சந்திரசேகர், கிருஷ்ணகுமார், ஜவகர், தமிழரசன், ஜெய்சங்கர், பிரேம், முனைவர் உசைன், கார்த்திக், ஜெயராமன், மாநிலக் குழு பொறுப்பாளர்கள் சிவக்குமார், கண்ணன், மாறன், ராஜா, உதயகுமார், கிளமெண்ட் ரொசாரியோ, கணேஷ்குமார், அன்பரசு, முத்துக்குமார், பரஞ்சோதி பாண்டியன், ராஜா முகமது, பால் அண்ணா, முத்துராமன், சுரேஷ், வெங்கடேசன், உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a Reply