கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் அவரது தெற்கு தொகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாநகராட்சி ஆணையாளருக்கு விடுத்துள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதியில் சமீப காலமாக தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரங்களில் தெரு நாய்கள் குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்ப்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் சில தெரு நாய்கள் வெறிபிடித்து திரிவதால் தெருவில் பொது மக்கள் நடந்து வரவே அச்சம்மடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தெருவோர நாய்களுக்கு கருத்தடை ஊசிகள் போடவும், நாய்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வேண்டிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply