வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் கொண்டை ஊசி வளைவில் உள்ள பாறையில் மோதி விபத்திற்கு உள்ளானதில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). இவரது ஏற்பாட்டில் 13 குழந்தைகள் உட்பட 31 பேர் கொண்ட குழுவினர் கேரளாவிற்கு சுற்றுலா புறப்பட்டனர், அங்கிருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் அங்கே சுற்றி பார்த்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.தினேஷ் ( வயது 25) என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார், இவர் கொண்டை ஊசி வளைவில் திருப்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பாறையில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 31 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு 13 குழந்தைகள் உட்பட 31 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததை விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலையில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே பயணிக்குமாறு வனத்துறையினரும், காவல்துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தூக்க கலக்கத்தில் பாறையில் மோதியதால் 31 பேர் படுகாயம்!

Leave a Reply