துபாயில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட 1,461 பாக்கெட் சிகரட்டுகள்

Spread the love

 

துபாயில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள், விலை உயர்ந்த செல்போன்களை கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் எப்போதும் போல், சுங்கத்துறை அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகள் சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, அவர்களிடம் சோதனை நடத்தினர். பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர்கள் துபாயில் இருந்து 1,461 சிகரெட்டு பாக்கெட்டுகள், 213 எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், 12 உயர்ரக செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர். இதன் மதிப்பு ரூ.36.81 லட்சம்.

அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள்,தருண் சேகரன், சையது அமானுல்லா சுல்தான், பிரத்தியுனன் கெங்கமுத்து, அஜ்மீர் காஜா மைதீன், மன்சூர்கான் பாபு,யாசர் அராபத் அப்துல் ஜப்பார் பைசல் அகமது முகமது யூசுப் ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.