மனிதர்களுக்கிடையிலான சமத்துவத்தை மீறி, தீட்டுச் சிந்தனையை ஆதரிக்கும் எந்தவொரு செயலும் மனித குலத்திற்கே எதிரானது என்று அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு ‘சிக்கந்தர் மலை’ என்றழைப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின் போது நீதிபதி,
-
“சிக்கந்தர் மலை என்றழைப்பதற்கான ஆதாரம் என்ன?”
-
“அங்கு ஆடு, கோழி பலி; கந்தூரி நடத்துவதற்கும் அனுமதி உள்ளதா?”
-
“நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி உள்ளதா?”
என்றும் பல கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அரசு தரப்பில் வருவாய் ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
🔹 “தீட்டு என்பது மதத்திலோ, ஜாதியிலோ, மனிதர்களுக்கிடையிலோ இருக்கக்கூடாது.
🔹 இது மனித குலத்தின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது.”
என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கில் ஒன்றிய தொல்லியல்துறையின் பதில்களும் தேவையாக உள்ளதால், நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



Leave a Reply