,

தி.மு.க. மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

a raja
Spread the love

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவை, தனியார் கலையரங்கில், திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ. வீரமணி ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .

திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டக் கழக செயலாளர்  தொ.அ. ரவி, கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் கோவை மாநகர் மாவட்டக் கழக செயலாளர்நா. கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில மாணவர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.